Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Partnerships for the goals

நிலைபேறான அபிவிருத்திக்கான பங்காளித்துவங்கள்

நிலைபேறான அபிவிருத்திக்கான பங்காளித்துவங்கள்

ஒரு வெற்றிகரமான நிலையான வளர்ச்சி நிகழ்ச்சி நிரலுக்கு அரசாங்கங்கள், தனியார் துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டாண்மை தேவைப்படுகிறது. கோட்பாடுகள் மற்றும் மதிப்புகள், பகிரப்பட்ட பார்வை மற்றும் மையத்தில் மக்களையும் கிரகத்தையும் வைக்கும் பகிரப்பட்ட குறிக்கோள்களின் அடிப்படையில் கட்டப்பட்ட இந்த உள்ளடக்கிய கூட்டாண்மை உலகளாவிய, பிராந்திய, தேசிய மற்றும் உள்ளூர் அளவில் தேவைப்படுகிறது.

நிலையான வளர்ச்சி நோக்கங்களை நிறைவேற்ற ட்ரில்லியன் டாலர் தனியார் வளங்களின் உருமாறும் சக்தியைத் திரட்டவும், திருப்பிவிடவும் மற்றும் திறக்கவும் அவசர நடவடிக்கை தேவை. நீண்டகால முதலீடுகள், வெளிநாட்டு நேரடி முதலீடு உட்பட, முக்கியமான துறைகளில், குறிப்பாக வளரும் நாடுகளில் தேவை. இதில் நிலையான ஆற்றல், உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து, தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்கள் ஆகியவை அடங்கும். பொதுத்துறை ஒரு தெளிவான திசையை அமைக்க வேண்டும். இத்தகைய முதலீடுகளை செயல்படுத்தும் கட்டமைப்புகள், விதிமுறைகள் மற்றும் ஊக்குவிப்பு கட்டமைப்புகளை மறுஆய்வு மற்றும் கண்காணிப்பு முதலீடுகளை ஈர்க்கவும் நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தவும் மாற்றியமைக்கப்பட வேண்டும். உச்ச தணிக்கை நிறுவனங்கள் மற்றும் சட்டமன்றங்களின் மேற்பார்வை செயல்பாடுகள் போன்ற தேசிய மேற்பார்வை வழிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

17.1

வரி மற்றும் ஏனைய வருமானங்களுக்கான உள்நாட்டு திறனை வலுப்படுத்துவதற்காக, அபிவருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான சர்வதேச உதவி வழியாக உள்நாட்டு வளங்களின் அசைவியக்கத்தை வலுப்படுத்துதல்

17.2

பல அபிவிருத்தியடைந்த நாடுகள் ஒத்துக்கொண்டபடி, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் ODA/GNIஐ 0.7 சதவீதமாகவும், ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் 0.15 தொடக்கம் 0.20 சதவீதமாகவும் கொண்டுவருதல் எனும் இலக்கை அடைதல் உள்ளடங்கலாக, அபிவிருத்தியடைந்த நாடுகள் அவர்களின் உத்தியோகபூர்வமான அபிவிருத்தி உதவி தொடர்பிலான கடமைப்பாடுகளை முழுமையாக அமுல்படுத்துவதற்காக, ழுனுயு வழங்குனர்கள் ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு ODA/GNIஐ குறைந்தளவு 0.20 சதவீதம் வழங்குவதை இலக்காக கொள்வதற்கு ஊக்குவிக்கப்படுகிறார்கள்

17.3

பல்வகை மூலதன ஆதாரங்களில் இருந்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்காக மேலதிகமாக நிதியியல் வளங்கள் திரட்டப்படுதல் வேண்டும்

17.4

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிலைபேறான நீண்டகாலக்கடனை அடைய பொருத்தமான கடன் நிதி, கடன் நிவாரணம், மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவை ஒருங்கிணைந்த கொள்கைகள் ஊடாக ஊக்கப்படுத்துவதை இலக்காகக் கொண்டு உதவ வேண்டியுள்ளதுடன் மற்றும் கடன் துயரத்தை குறைக்கும் முகமாக வெளிக்கடனால் அதிக கடன்பட்டுள்ள ஏழை நாடுகளின் கடன் துயரத்தை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும்

17.5

ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் முதலீட்டு ஊக்குவிப்பு கொள்கைகள் அமுல்படுத்தப்படவேண்டும்

17.6

வடக்கு-தெற்கு, தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண பிராந்தியம் மற்றும் சர்வதேசத்தின் ஒத்துழைப்பானது விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் என்பவை தொடர்பில் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் ஒரு பரஸ்பர ஒப்பந்த விதிமுறைகளுக்கமைய அறிவு சம்பந்தமான பகிர்வு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் தற்போதுள்ள பொறிமுறையின் மத்தியில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைப்பின் மூலம் முக்கியமாக ஐக்கிய நாடுகளின் நிலைக்கமைய மற்றும் உலக தொழில்நுட்ப அனுசரணையின் பொறிமுறைக்கேற்பவும் மேற்கொள்ளப்படல் வேண்டும்

17.7

சாதகமான அடிப்படையில் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சுற்றுச்சூழலை கவனத்தில் கொண்ட தொழில்நுட்பங்களின் அபிவிருத்தி, பரிமாற்றம், பரப்புதல் மற்றும் பரவல் என்பன ஊக்குவிக்கப்பட வேண்டியதுடன் முக்கியமாக பரஸ்பர இணக்கப்பாட்டிற்கமைய சலுகை மற்றும் விருப்பு அடிப்படையில் இவை முன்னெடுக்கப்படல் வேண்டும்

17.8

2017களில் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் தொழில்நுட்ப வங்கி மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கள், திறன் அபிவிருத்திஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்துதல் அத்துடன் செயலாற்றும் தொழில்நுட்பமானது முக்கியமாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரிக்கப்படல் வேண்டும்

17.9

வடக்கு-தெற்கு, தெற்கு-தெற்கு மற்றும் முக்கோண கூட்டுறவின் மூலம் சர்வசேத உதவியானது, அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வினைத்திறனான, இலக்கு வைக்கப்பட்டளவு திறன் விருத்தியை அடைவதற்காக அதிகரிக்கப்பட வேண்டியதுடன், அத்திறன் விருத்தியானது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடையும் தேசிய திட்டங்களுக்கு உதவியாக முன்னெடுக்கப்படுதல் வேண்டும்

17.10

உலக வர்த்தக அமைப்பின் கீழ் உலகளாவிய, சட்ட அடிப்படையிலான, திறந்த, பாரபட்சமற்ற மற்றும் சமத்துவமான பலதரப்பட்ட வர்த்தக அமைப்புக்கள் ஊக்குவிக்கபட வேண்டியதுடன் டோஹா அபிவிருத்தி நிரலின் கீழான பேச்சுவார்த்தை முடிவுகளும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும்

17.11

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஏற்றுமதிகள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கப்பட வேண்டும், குறிப்பாக 2020களில், உலக ஏற்றுமதி பங்களிப்பில் ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளின் பங்கை இரட்டிப்பாக்குதல் என்ற பார்வையில் செயலாற்ற வேண்டும்

17.12

அனைத்து ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் ஒரு நீண்டகால அடிப்படையில் வரியற்ற மற்றும் ஒதுக்கீடு அற்ற சந்தைக்கான கிடைப்பனவானது உரிய நேரத்தில் செயற்படுத்தப்பட வேண்டும். இது உலக வர்த்தக அமைப்பின் முடிவுகளுக்கு இசைவானதாகவும் ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளின் இறக்குமதி தொடர்பில் வெளிப்படையாகவும் எளிதாகவும் இருப்பதும் மற்றும் சந்தைக்கிடைப்பனவை இலகுவாக்கவும் வேண்டும்

17.13

கொள்கை ஒருங்கிணைப்பு மற்றும் கொள்கை இணக்கப்பாட்டின் மூலம் பருவினப் பொருளாதார ஸ்திரத்தன்மையை அதிகரித்தல் வேண்டும்

17.14

நிலைபேறான அபிவிருத்திக்காக கொள்கை இணக்கப்பாட்டினை அதிகரித்தல் அவசியமாகும்

17.15

அனைத்து நாடுகளின் கொள்கைகள் மற்றும் தலைமைத்துவத்திற்கு மதிப்பளிக்கும் அதேவேளை நிலையான அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பில் கொள்கைகள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டும்

17.16

நிலைபேறான அபிவிருத்திக்கான உலகளவான பங்குடைமையை விருத்தி செய்தல். பல்துறைப்பங்காளர்களின் பங்குடைமை அடிப்படையில் அறிவினை பரிமாறிக் கொள்ளல், நிபுணத்துவம், தொழில்நுட்பம் மற்றும் நிதியியல் வளங்கள் மூலமாக எல்லா நாடுகளிலும் முக்கியமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் அடையப்பெறுவதற்கு உதவுதல்

17.17

அனுபவம் மற்றும் வள மூலங்களின் பங்குடைமை அடிப்படையில் செயற்றிறன்மிக்க பொதுமக்கள், பொதுதனியார் மற்றும் குடியியல் சமூக பங்குடைமைகள் உருவாதலை ஊக்குவித்தல்

17.18

2020களில், குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் மற்றும் சிறிய தீவுகளில், அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்கள் ஆகியன அடங்கலாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் திறன் விருத்திக்கான ஆதரவு அதிகரிக்கப்பட வேண்டியுள்ளதுடன் வருமானம், பால்நிலை, வயது, ஜாதி, இனம், இடம்பெயரும் நிலை, இயலாமை, புவியியல், இடம் மற்றும் ஏனைய பண்புகள், தொடர்பில் தேசிய மட்டத்தில் தரமான, சரியான நேரத்தில் மற்றும் நம்பகரமான தரவு ஆகியவற்றின் தொடர்பிலான கிடைப்பனவை அதிகரித்தல் வேண்டும்

17.19

2030களில், தற்போதுள்ள முன்னெடுப்புக்களின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றத்தை அளவிடும் அளவீடுகள் உருவாக்கப்படுதல். அவை அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு சாதகமானவையாகவும் புள்ளிவிபரவியல் திறன் விருத்திக்கு உதவுபவையாகவும் இருத்தல்