தரமான கல்வியைப் பெறுவதே நிலையான வளர்ச்சியை உருவாக்குவதற்கான அடித்தளமாகும். வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அனைத்தையும் உள்ளடக்கிய கல்விக்கான அணுகல் மூலமாக உலகின் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கு புதுமையான தீர்வுகளை உருவாக்கத் தேவையான கருவிகளைக் கொண்டு உள்ளூர் மக்களைச் தயார்படுத்த உதவும்.
265 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் தற்போது பாடசாலையிலிருந்து விலகி உள்ளனர், அவர்களில் 22% ஆரம்ப பள்ளி வயதுடையவர்கள். கூடுதலாக, பாடசாலைகளில் படிக்கும் குழந்தைகளுக்கு கூட வாசிப்பு மற்றும் கணிதத்தில் அடிப்படை திறன்கள் இல்லை. கடந்த தசாப்தத்தில், அனைத்து மட்டங்களிலும் கல்விக்கான அணுகலை அதிகரிப்பதற்கும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாடசாலைகளில் உட்சேர்ப்பு விகிதங்களை அதிகரிப்பதற்கும் பெரியளவிலான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடிப்படை கல்வியறிவு திறன்கள் பெரிதும் மேம்பட்டுள்ளன, ஆனால் உலகளாவிய கல்வி இலக்குகளை அடைய இன்னும் பெரிய முன்னேற்றங்களை செய்வதற்கு தைரியமான முயற்சிகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக, பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையிலான ஆரம்பக் கல்வியில் உலகம் சமத்துவத்தை அடைந்துள்ளது, ஆனால் சில நாடுகள் எல்லா நிலைகளிலும் அந்த இலக்கை அடைந்துள்ளன.
தரமான கல்வி இல்லாததற்கான காரணங்கள் போதுமான பயிற்சி பெற்ற ஆசிரியர்களின் பற்றாக்குறை, பள்ளிகளின் மோசமான நிலைமைகள் மற்றும் கிராமப்புற குழந்தைகளுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் தொடர்பான நியாயமான பிரச்சினைகள். ஏழ்மையான குடும்பங்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி வழங்க, கல்வி உதவித்தொகை, ஆசிரியர் பயிற்சி பட்டறை, பள்ளிக் கட்டிடம் மற்றும் பள்ளிகளுக்கு நீர் மற்றும் மின்சார வசதியை மேம்படுத்துதல் போன்றவற்றில் அதிக முதலீடு தேவைப்படுகின்றது.