நாம் வாழ விரும்பும் உலகில், அனைவருக்கும் சுத்தமான, அணுகக்கூடிய நீர்- இன்றியமையாத பகுதியாகும், இதை அடைய உலகத்தில் போதுமான புதிய நீர் உள்ளது. இருப்பினும், மோசமான பொருளாதாரம் அல்லது மோசமான உள்கட்டமைப்பு காரணமாக, குழந்தைகள் உட்பட மில்லியன் கணக்கான மக்கள், ஒவ்வொரு ஆண்டும் போதிய நீர் வழங்கல் இன்மை, துப்புரவேற்பாடு மற்றும் அதுசார் சுகாதாரம் தொடர்பான நோய்களால் இறக்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை, நீரின் மோசமான தரம் மற்றும் போதிய துப்புரவேற்பாடு ஆகியவை உணவு பாதுகாப்பு, வாழ்வாதார தேர்வுகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஏழை குடும்பங்களுக்கு கல்வி வாய்ப்புகளை பெறுவதில் எதிர்மறையாக பாதிக்கிறது. தற்போது, 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் நன்னீர் ஆதாரங்களுக்கான அணுகலைக் குறைக்கும் அபாயத்துடன் வாழ்ந்து வருகின்றனர், மேலும் 2050 ஆம் ஆண்டளவில், குறைந்தது நான்கு பேரில் ஒருவராவது நாள்பட்ட அல்லது தொடர்ச்சியான நன்னீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாட்டில் வாழ வாய்ப்புள்ளது. உலகின் ஏழ்மையான நாடுகளில் சிலவற்றை பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் குறிப்பிட்ட வறட்சி மோசமாக்குகிறது. அதிர்ஷ்டவசமாக, கடந்த தசாப்தத்தில் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் சுகாதாரம் தொடர்பாக பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் உலக மக்கள் தொகையில் 90% க்கும் அதிகமானோர் இப்போது மேம்பட்ட குடிநீர் ஆதாரங்களை அணுகியுள்ளனர்.
துப்புரவு மற்றும் குடிநீருக்கான அணுகலை மேம்படுத்துவதற்கு, சகாரா கீழமை ஆபிரிக்கா, மத்திய ஆசியா, தெற்காசியா, கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் உள்ளூர் மட்டத்தில் நன்னீர் சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுகாதார வசதிகளை நிர்வகிப்பதில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்.