Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Reduced inequalities

சமத்துவமின்மையை குறைத்தல்

  1. முகப்பு
  2. நிலையான அபிவிருத்தி இலக்குகள்
  3. சமத்துவமின்மையை குறைத்தல்

சமத்துவமின்மையை குறைத்தல்

சர்வதேச சமூகம் மக்களை வறுமையிலிருந்து மீட்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளது.  மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகள் - குறைவான வளர்ச்சியடைந்த நாடுகள், நில எல்லைகலுள்ள வளர்ச்சியடைந்து வரும் நாடுகள் மற்றும் வளர்ச்சியடைந்து வரும் சிறிய தீவு நாடுகள் - வறுமையை குறைப்பதில் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றன.   இருப்பினும், சமத்துவமின்மை நீடிக்கின்றமையால் மற்றும் சுகாதார மற்றும் கல்விச் சேவைகள் மற்றும் பிற சொத்துக்களுக்கான அணுகல் தொடர்பாக பாரியளவிலான ஏற்றத்தாழ்வுகள் காணப்படுகின்றன.

பொருளாதாரம், சமூக மற்றும் சுற்றுச்சூழல் - நிலையான வளர்ச்சியின் மூன்று பரிமாணங்களை உள்ளடக்கியதாக அமையாதுவிட்டால் வறுமையைக் குறைக்க பொருளாதார வளர்ச்சி போதுமானதல்ல என்ற ஒருமித்த கருத்து வளர்ந்து வருகிறது. அதிர்ஷ்டவசமாக, வருமான சமத்துவமின்மை நாடுகளுக்கிடையேயும் மற்றும் நாடுகளுக்குள்ளேயும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது, 94 நாடுகளில் 60 நாடுகளின் தனிநபர் வருமானம் தரவு உள்ள தேசிய சராசரியை விட வேகமாக உயர்ந்துள்ளது. குறைந்த வளர்ச்சியடைந்து வரும் நாடுகளிலிருந்தும் ஏற்றுமதிக்கு சாதகமான அணுகல் நிலைமைகளை உருவாக்குவது தொடர்பாக சில முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன.

சமத்துவமின்மையைக் குறைப்பதற்குரிய கொள்கைகள், உலகளாவிய கொள்கையடிப்படையிலாக இருக்க வேண்டும், பின்தங்கிய மற்றும் ஒதுக்கப்பட்ட மக்களின் தேவைகளுக்கு அதிக கவனம் செலுத்தபடல் வேண்டும். IMFக்குள் வளர்ந்து வரும் நாடுகளின் வாக்குகளின் பங்கை அதிகரிப்பதைத் தவிர, வளரும் நாடுகளில் இருந்து ஏற்றுமதிக்கு ஆதரவளிக்கும் தீர்வையில்லா பங்களிப்புக்களின் அதிகரிப்பு மற்றும் அதிகரிப்படல் வேண்டும்.

10.1

2030களில், அடிமட்டத்திலுள்ள மக்களின் 40 வீதத்தினரின் வருமானத்தை நிலைபேறாக தேசிய சராசரியை விட அதிகமான வீதத்தில் பேணுதல்.

10.2

2030களில், அரசியல், சமூக, பொருளாதாரம் ரீதியில் அனைவரதும் உள்ளடக்கலை ஊக்கப்படுத்தி வலுப்படுத்த வேண்டும். இதில் வயது, பால், இயலாமை, சாதி, இனம், பிறப்பிடம் அல்லது பொருளாதாரம் அல்லது ஏனைய நிலைமைகள் ஆகிய அனைத்தும் கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்.

10.3

சமமான வாய்ப்புக்களை உறுதி செய்து விளைவுகளின் சமத்துவமின்மையை நீக்குதல். பாரபட்சமான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நீக்குதல், அதற்கான சட்டங்கள், கொள்கைகள், நடவடிக்கைகள் ஆகியவற்றை ஊக்குவித்தல்.

10.4

கொள்கைகளை (நிதி, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் கொள்கைகள் என்பன அடங்கலாக) ஏற்று
நடைமுறைப்படுத்தி படிப்படியாக சரியான சமத்துவத்தை நிலைநாட்ட முடிதல்.

10.5

உலக நிதிச் சந்தைகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மேம்படுத்தப்பட்டு அச்செயன்முறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.

10.6

உலகளவிலான சர்வதேச பொருளாதாரம் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் முடிவெடுத்தல்
செயன்முறைகளில், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பிரதிநிதித்துவத்தையும் அவற்றுக்கான
குரல் எழுப்புதலையும் அதிகரித்தலை உறுதிப்படுத்தல். இதன் மூலம் பயனுள்ள, நம்பகமான, பொறுப்பு மற்றும் சட்டபூர்வமான நிறுவனங்களின் உருவாக்கத்துக்கு உதவுதல்.

10.7

திட்டமிட்ட மற்றும் நன்கு நிர்வகிக்கப்படும் குடிப்பெயர்வு கொள்கைகளை செயல்படுத்துவதன் மூலம் மக்களின் ஒழுங்கான, பாதுகாப்பான, வழக்கமான மற்றும் பொறுப்பான குடிப்பெயர்வு ஆகியவற்றுக்கு உதவுதல்.

10.A

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு முக்கியமாக ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு விசேட மற்றும் வேறுபட்ட அணுகுமுறையை கையாளுதல். இது உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களுக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.

10.B

உத்தியோகப்பூர்வ அபிவிருத்தி உதவி மற்றும் நிதியியல் பாய்வு நடவடிக்கைகள் ஊக்கப்படுத்தப்பட
வேண்டியதுடன், வெளிநாட்டிலிருந்து நேரடியான முதலீடு உட்பட அரசுகளுக்கு பெரியளவிலான
தேவை எங்கேயிருக்கிறதோ முக்கியமாக குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள், ஆபிரிக்க நாடுகள், சிறிய
தீவில் அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்கள் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்
தொடர்பில் அவற்றின் தேசிய திட்டங்களுக்கும் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட
வேண்டும்.

10.C

2030களில், புலம்பெயர்ந்தவர்களின் பணம் அனுப்புதலுக்கான பணப் பரிவர்த்தனை செலவானது
3 வீதத்திற்கும் குறைவாக குறைக்கப்படல் வேண்டும். மற்றும் 5 வீதத்திற்கும் அதிகமான பணம் அனுப்பும்
இடைவழிகள் அகற்றப்படல் வேண்டும்.