நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி என்பது வளம் மற்றும் ஆற்றல் திறன், நிலையான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை சேவைகள், பசுமையான மற்றும் ஒழுக்கமான வேலைகள் மற்றும் அனைவருக்கும் சிறந்த வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல் ஆகும். அதன் செயல்படுத்தல் ஒட்டுமொத்த வளர்ச்சித் திட்டங்களை அடைய உதவுகிறது, எதிர்கால பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் சமூக செலவுகளைக் குறைக்கிறது, பொருளாதார போட்டித்தன்மையை வலுப்படுத்துகிறது மற்றும் வறுமையைக் குறைக்கிறது.
தற்போதைய நேரத்தில், குறிப்பாக கிழக்கு ஆசியாவில், இயற்கை வளங்களின் மீதான பொருள் நுகர்வு அதிகரித்து வருகிறது. காற்று, நீர் மற்றும் நில மாசுபாடு தொடர்பான சவால்களை ஏனைய நாடுகளும் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன.
நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்தி "குறைவானதை கொண்டு மேலும் மேலும் சிறப்பாக" செய்வதை நோக்கமாகக் கொண்டிருப்பதால், வாழ்க்கைச் செயல்பாட்டில் வள பயன்பாடு, சீரழிவு மற்றும் மாசுபாடு ஆகியவற்றைக் குறைப்பதன் மூலம் பொருளாதார நடவடிக்கைகளிலிருந்து நிகர நலன் பெறும் ஆதாயங்களை அதிகரிக்கலாம், அதே நேரத்தில் இது வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும். உற்பத்தியாளர் முதல் இறுதி நுகர்வோர் வரை அனைவரையும் உள்ளடக்கிய விநியோகச் சங்கிலியில் செயல்படுவதிலும் குறிப்பிடத்தக்க கவனம் தேவை. நிலையான நுகர்வு மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து நுகர்வோருக்கு கல்வி கற்பித்தல், தரநிலைகள் மற்றும் சிட்டைகள் மூலம் அவர்களுக்கு போதுமான தகவல்களை வழங்குதல் மற்றும் நிலையான பொது கொள்முதலில் ஈடுபடுதல் என்பவை இதில் அடங்கும்.