Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Peace, justice and strong institutions

சமாதானம், நீதி, மற்றும் உறுதியான நிறுவனங்கள்

சமாதானம், நீதி, மற்றும் உறுதியான நிறுவனங்கள்

சர்வதேச கொலை, குழந்தைகள் மீதான வன்முறை, மனித கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை ஆகியவற்றின் அச்சுறுத்தல்கள் நிலையான வளர்ச்சிக்கான அமைதியான மற்றும் உள்ளடக்கிய சமூகங்களை ஊக்குவிக்க முக்கியமானவை. அனைவருக்கும் நீதி கிடைக்க வழிவகை செய்வதோடு, அனைத்து நிலைகளிலும் பயனுள்ள, பொறுப்புள்ள நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அவை வழி வகுக்கின்றன.

கடந்த தசாப்தத்தில் கொலை மற்றும் கடத்தல் வழக்குகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டாலும், லத்தீன் அமெரிக்கா, சப்-சஹாரா ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் வேண்டுமென்றே கொலை செய்யும் அபாயத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆக்கிரமிப்பு மற்றும் பாலியல் வன்முறை மூலம் குழந்தைகளின் உரிமை மீறல்கள் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைத் தொடர்கின்றன, குறிப்பாக குறைவான அறிக்கையிடல் மற்றும் தரவு பற்றாக்குறை பிரச்சனையை மோசமாக்குகிறது.

இந்தச் சவால்களைச் சமாளிக்கவும் மேலும் அமைதியான, உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்கவும், மிகவும் திறமையான மற்றும் வெளிப்படையான கட்டுப்பாடுகள் மற்றும் விரிவான, யதார்த்தமான அரசாங்க வரவு செலவுத் திட்டங்கள் இருக்க வேண்டும். தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முதல் படிகளில் ஒன்று, உலகளாவிய பிறப்புப் பதிவைச் செயல்படுத்துதல் மற்றும் உலகெங்கிலும் மிகவும் சுதந்திரமான தேசிய மனித உரிமை நிறுவனங்களை உருவாக்குதல் ஆகும்.

16.1

அனைத்து விதமான வன்முறைகளையும் மற்றும் அது தொடர்பிலான இறப்பு வீதங்களையும் சகல இடங்களிலும் குறிப்பிடத்தக்களவு குறைத்தல்

16.2

சிறுவர்களுக்கெதிரான துஷ்பிரயோகம், சுரண்டல், கடத்தல் மற்றும் அனைத்து விதமான வன்முறைகளையும் சித்திரவதைகளையும் முடிவுக்கு கொண்டு வருதல்

16.3

அனைவருக்கும் சமமான நீதி என்ற விதிமுறையை உறுதிப்படுத்த தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் சட்ட ஆட்சியினை மேம்படுத்தல்

16.4

2030களில் சட்டவிரோத நிதியியல் மற்றும் ஆயுதப்பரிமாற்றம் ஆகியவற்றை கணிசமான வகையில் குறைத்தல், திருடப்பட்ட சொத்துக்களை கண்டுபிடித்தல, திருப்பிக் கொடுத்தல் செயன்முறையை வலுப்படுத்தல் மற்றும் அனைத்து விதமான திட்டமிடப்பட்ட குற்றங்களுக்கு எதிராக போராடுதல்

16.5

அனைத்து மட்டத்திலுமான ஊழல் மற்றும் இலஞ்சம் ஆகியன கணிசமானளவு குறைக்கப்படுதல்

16.6

வினைத்திறனான, பொறுப்பான மற்றும் வெளிப்படையான நிறுவனங்கள் அனைத்து மட்டங்களிலும் அமைக்கப்படுதல்

16.7

அனைத்து மட்டங்களிலும் பதிலளிக்கக்கூடிய, அனைவரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பங்குபற்றக்கூடிய தன்மை கொண்ட முடிவுகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தல்

16.8

உலகை ஆளும் அபிவிருத்தி ஆகியவற்றை வரும் நாடுகளின் பங்களிப்பு விரிவுபடுத்தப்பட்டு, வலுப்படுத்தப்பட வேண்டும்

16.9

2030களில், பிறப்பு பதிவு உட்பட சட்டரீதியான அடையாளம் அனைவருக்கும் வழங்கப்படுதல்

16.10

தேசிய சட்டத்திற்கும், சர்வதேச உடன்படிக்கைகளுக்கும் அமைய பொதுமக்களுக்கு தகவல் கிடைப்பனவு மற்றும் பாதுகாப்பான அடிப்படைச் சுதந்திரங்கள் இருப்பதை உறுதிசெய்தல்

16.A

இதற்கு தொடர்புடைய தேசிய மட்டத்திலான நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டியதுடன் அனைத்து மட்டங்களிலும் சர்வதேச ஒத்துழைப்பு ஊடாக வினைத்திறனை அதிகரிக்க வேண்டும். முக்கியமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வன்முறைகள், போர் பயங்கரவாதம் மற்றும் குற்றம் ஆகியவை தடுக்கப்படல் வேண்டும்

16.B

நிலைபேறான அபிவிருத்திக்காக பாரபட்சமற்ற சட்டங்கள் மற்றும் கொள்கைகள் செயல்படுத்தப்படுவதை ஊக்குவித்தல்