Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Life Below Water

கடல்சார் வளங்கள்

கடல்சார் வளங்கள்

உலகப் பெருங்கடல்கள் - அவற்றின் வெப்பநிலை, வேதியியல், நீரோட்டங்கள் மற்றும் வாழ்க்கை - பூமியை மனிதகுலத்திற்கு வாழக்கூடிய உலகளாவிய அமைப்புகளை இயக்குகிறது. நமது மழைநீர், குடிநீர், வானிலை, காலநிலை, கடலோரப் பகுதிகள், நமது உணவின் பெரும்பகுதி, மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜன் ஆகியவை அனைத்தும் இறுதியில் கடலால் வழங்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுகின்றன. வரலாறு முழுவதும், பெருங்கடல்களும் கடல்களும் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடங்களாக இருந்தன.

இந்த அத்தியாவசிய உலகளாவிய வளத்தை கவனமாக நிர்வகிப்பது ஒரு நிலையான எதிர்காலத்தின் முக்கிய அம்சமாகும். இருப்பினும், தற்போதைய நேரத்தில், மாசுபடுதல் மற்றும் கடல் அமிலமயமாக்கல் காரணமாக கடலோர நீரின் தொடர்ச்சியான சரிவு சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிரியலின் செயல்பாட்டில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகிறது. இது சிறிய அளவிலான மீன்வளத்தையும் எதிர்மறையாக பாதிக்கிறது.

கடல் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் திறம்பட நிர்வகிக்கப்பட்டு நன்கு வளம் பெற வேண்டும் மற்றும் அதிக மீன்பிடித்தல், கடல் மாசுபாடு மற்றும் கடல் அமிலமயமாக்கல் ஆகியவற்றைக் குறைக்க விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும்.

14.1

2025களில், அனைத்து விதத்திலுமான கடல் மாசுபாடு, முக்கியமாக நிலம் சம்பந்தமான நடவடிக்கைகள், அத்துடன் கடல் குப்பைகள் மற்றும் ஊட்டச்சத்து மூலமான மாசுபாடுகளும் அடங்கலாக இவை தடுக்கப்படுதலும் மற்றும் குறிப்பிடப்பட்டளவு குறைக்கப்படுதலும் வேண்டும்

14.2

2020களில், கடல்சார்ந்த மற்றும் கடலோரச் சுற்றுச்சூழலை நிலையாக நிர்வகித்தல் மற்றும் பாதுகாத்தல் மூலம் குறிப்பிடத்தக்க பாதகமான விளைவுகளை தவிர்க்க முடிவதுடன் மேலும் மீளுந்திறனை வலுப்படுத்துவதன் மூலம், ஆரோக்கியமான மற்றும் உற்பத்தித்திறன் மிக்க சமுத்திரங்களை உருவாக்குதல். அதற்கான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் இவைகளை இருந்த நிலைக்கு மீண்டும் கொண்டு வர முடிகிறது

14.3

கடல் அமிலமயமாக்கத்தின் தாக்கத்தினை குறைக்கவும் கண்காணிக்கவும் வேண்டியதுடன் அனைத்து மட்டங்களிலிருந்து பெறும் மேம்பட்ட அறிவியல் ஒத்துழைப்பின் மூலமும் தாக்கங்களைக் குறைக்கலாம்

14.4

2020களில், திறம்பட அறுவடையைக் கட்டுப்படுத்தல் மற்றும் அளவிற்கு அதிகமான மீன்பிடித்தல், சட்டத்திற்கு புறம்பானதும், பதிவு செய்யப்படாததும் மற்றும் முறையற்ற மீன்பிடித்தல், நாசகரமான மீன்பிடித்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் அறிவியல் சார்ந்த மேலாண்மைத்திட்டங்களை அமுல்படுத்தல், குறுகிய நேரத்தில் சாத்தியமான முறையில் கையிருப்புகளை மீட்டல், அத்துடன் குறைந்தபட்ச நேரத்தில் அதன் அதிகபட்ச நிலையான உற்பத்தி விளைச்சலை மேம்படுத்தல் என்பன அவற்றின் உயிரியல் சிறப்பியல்புகளுக்கு அமைவாக நிர்ணயிக்கப்படுதல் வேண்டும்

14.5

2020களில், கடலோர மற்றும் கடல் பகுதிகளில் குறைந்தபட்சம் 10 சதவீதமேனும், தேசிய மற்றும் சர்வதேச சட்டம் ஆகியவற்றிற்கு இசைவானதாகவும் மற்றும் தற்போதுள்ள சிறந்த அறிவியல் தகவல் அடிப்படையிலும் பாதுகாக்கப்படல் வேண்டும்

14.6

2020களில், ஒரு சில கடற்றொழில் மானியங்களானது அதிகளவிலான கொள்வனவு மற்றும் அதிகப்படியான மீன்பிடித்தல் தொடர்பில் தடைசெய்யப்பட வேண்டியதுடன், சட்டத்திற்கு புறம்பானதும், பதிவு செய்யப்படாததும் மற்றும் முறையற்ற மீன்பிடித்தல் தொடர்பில் அறிமுகப்படுத்தும் இவ்வகையான புதிய மானிய முறைகளிலிருந்து விலகியிருத்தலானது பொருத்தமானது. செயற்திறன்மிக்க வித்தியாசமான நடவடிக்கைகளின் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் மற்றும் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்காக அவை அங்கீகரிக்கப்பட்டு உலக வர்த்தக அமைப்பு கடற்றொழில் மானியம் தொடர்பிலான பேச்சுவார்த்தையை ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகவும் வைத்திருக்க வேண்டும்

14.7

2030களில், பொருளாதார ரீதியிலான நன்மைகளானது சிறிய தீவில் அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்கள் மற்றும் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்காக கடல் வளங்களின் நிலையான பயன்பாடு அதிகரிக்கப்பட வேண்டியதுடன் இவற்றின் மூலம் மீன்வளம், மீன்வளர்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை என்பவை நிலையான முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டும்

14.A

அறிவியல்சார்ந்த அறிவை அதிகரித்தல், ஆராய்ச்சி சம்பந்தமான அளவினை விருத்திசெய்தல் மற்றும் கடல் தொழில்நுட்பத்தினை பரிமாறிக்கொள்ளுதலுடன் அரசாங்கங்களுக்கிடையிலான கடலாய்வியல் ஆணையத்தின் வரையறைகள் மற்றும் வழிமுறைகள் கடல் தொழில்நுட்பத்தின் பரிமாற்றம் தொடர்பில் கண்காணிக்கப்படுதல் அவசியமாகும். கடலின் சுகாதாரம் மேம்படுத்தல் மற்றும் கடல் பல்லுயிர் பங்களிப்பானது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், முக்கியமாக சிறிய தீவில் அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்கள் மற்றும் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகள் என்பவற்றின் அபிவிருத்தி தொடர்பில் மேம்படுத்தப்படல் வேண்டும்

14.B

கடல் வளங்கள் மற்றும் சந்தைகளில் சிறியளவிலான பாரம்பரிய மீன் பிடிக்கும் அனுமதி வழங்கப்படல்
வேண்டும்

14.C

யிற்கு அமைவாக சமுத்திரங்களின் மற்றும் அதன் வளங்களின் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டினை அதிகரித்தல் தொடர்பில் சர்வதேச சட்டமுறைமையொன்று செயல்படுத்தப்பட வேண்டியுள்ளதுடன் அது பாதுகாப்பான மற்றும் நிலையான சமுத்திரங்களின் மற்றும் அதன் வளங்களின் பயன்பாடு தொடர்பில் சட்ட கட்டமைப்பொன்றை வழங்குகின்றது. அது 'நாம் விரும்பும் எதிர்காலம்" என்ற 158ஆவது பந்தியில் உள்ளதை நினைவு கூறுகின்றது