வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பது மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். 1990 மற்றும் 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கடுமையான வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ள போதிலும், மிக அதிகமான மனித தேவைகளுக்காக இன்னும் பலர் போராடுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டு நிலவரப்படி, சுமார் 736 மில்லியன் மக்கள் ஒரு நாளைக்கு 1.90 அமெரிக்க டொலருக்கும் குறைவான நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்; பலருக்கு உணவு, சுத்தமான குடிநீர் மற்றும் சுகாதார வசதி இல்லை. சீனா, இந்தியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட விரைவான வளர்ச்சி மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து உயர்த்தியுள்ளது, ஆனால் இம்முன்னேற்றம் சீரற்றதாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் ஏழைகளாக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம், ஏனெனில் அவர்களுக்கு குறைந்தளவிலான ஊதியம், கல்வி, மற்றும் குறைவான சொத்து உரிமை உள்ளது.
தெற்காசியா மற்றும் சகாரா-கீழமை ஆபிரிக்கா போன்ற பிற பகுதிகளில் தீவிர வறுமையில் வாழும் 80 சதவீதத்தினரைக் கொண்டுள்ளமையால் முன்னேற்றம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தால் புதிய அச்சுறுத்தல்களாக, சண்டைகள் மற்றும் உணவு பாதுகாப்பின்மை, மக்களை வறுமையிலிருந்து வெளியேற்றுவதற்கு இன்னும் கூடுதலான செயற்பாடுகள் தேவை.
SDGக்கள் 2030க்குள் அனைத்து வடிவங்களிலும் அனைத்து பரிமாணங்களிலும் உள்ள வறுமையை, நாங்கள் தொடங்கியதை முடிக்க தைரியமான அர்ப்பணிப்புடன் முடிவுக்குக் கொண்டுவர உதவும். இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய, அதிகரிக்கும் அடிப்படை வளங்களையும் சேவைகளையும் குறி வைப்பதை உள்ளடக்குகிறது, மேலும் சண்டைகள் மற்றும் காலநிலை தொடர்பான பேரழிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களையும் ஆதரிக்கின்றது.