Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Affordable and clean energy

அனைவராலும் பெறக்கூடிய மற்றும் நியாயமான நவீன சக்தி

அனைவராலும் பெறக்கூடிய மற்றும் நியாயமான நவீன சக்தி

இன்று உலகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெரிய சவாலுக்கும் வலுசக்தி ஆற்றல் முக்கியமானது. வேலைகள், பாதுகாப்பு, காலநிலை மாற்றம், உணவு உற்பத்தி அல்லது அதிகரிக்கும் வருமானம், அனைத்திற்கும் வலுசக்தி அணுகல் அவசியம். இந்த இலக்கை நோக்கி செயல்படுவது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது ஏனைய வலுவாதார அபிவிருத்தி இலக்குகளுடன் இணைகிறது. எரிசக்திக்கான உலகளாவிய அணுகல், அதிகரித்த ஆற்றல் திறன் மற்றும் புதிய பொருளாதார மற்றும் வேலை வாய்ப்புகள் மூலம் புதுப்பிக்கத்தக்க வலுச்சக்தி அதிக பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது மிகவும் நிலையான மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய சமூகங்களை உருவாக்குவதற்கும் காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் பின்னடைவிற்கும் முக்கியமானது.

தற்போது, சுத்தமான சமையல் தீர்வுகள் கிடைக்காத மற்றும் காற்று மாசுபடுவதால் ஏற்படும் ஆபத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 3 பில்லியன் மக்கள் உள்ளனர். கூடுதலாக, 1 பில்லியனுக்கும் குறைவான மக்கள் மின்சாரம் இல்லாமல் செயல்படுகிறார்கள், அவர்களில் 50% சகாரா கீழமை ஆபிரிக்காவில் மட்டுமே காணப்படுகின்றனர். அதிர்ஷ்டவசமாக, கடந்த தசாப்தத்தில் நீர், சூரிய மற்றும் காற்றாலை ஆகியவற்றிலிருந்து பெறப்படும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தைப் பயன்படுத்துவது மற்றும் GDPயின் ஒரு யூனிட்டுக்கு பயன்படுத்தப்படும் ஆற்றல் விகிதமும் குறைந்து வருகிறது.

எவ்வாறாயினும், சவால் தீர்க்கப்படாமல் உள்ளது, மேலும் சுத்தமான எரிபொருள் மற்றும் தொழில்நுட்பத்திற்கான அதிக அணுகல் இருக்க வேண்டும், மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை கட்டிடங்கள், போக்குவரத்து மற்றும் தொழில்துறையில் இறுதி பயன்பாட்டு செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பது குறித்து அதிக முன்னேற்றம் தேவை. வலுச்சக்தி ஆற்றலில் போது தனியார் முதலீடுகளும் அதிகரிக்கப்பட வேண்டும், மேலும் உலகின் எரிசக்தி அமைப்புகளை மாற்றுவதற்கான ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் புதுமையான வணிக மாதிரிகள் ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

7.1

2030களில், நம்பகமான, மலிவான, நவீன சக்தி சேவைகளின் உலகளாவிய கிடைப்பனவை உறுதி செய்தல்.

7.2

2030களில், உலக எரிபொருட் கலவையில் புதுப்பிக்கத்தக்க சக்திவலுக்களின் பங்கை கணிசமான அளவு அதிகரிக்க வேண்டும்.

7.3

2030களில், உலகளாவிய சக்திவலுக்களின் வினைத்திறன் அதிகரிப்பு வீதம் இரட்டிப்பாக்கப்பட வேண்டும்.

7.A

2030களில், தூய சக்தியின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க சக்தி, சக்தியின் செயற்திறன், மேம்பட்டதும் தூய்மையானதுமான புதைப்படிவ எரிபொருள் தொழில்நுட்பம் ஆகியவற்றின் கிடைப்பனவுக்கு வழி வகுக்கவும், எரிபொருள் உள்கட்டமைப்பு மற்றும் சுத்தமான எரிபொருள் தொழில்நுட்பம் தொடர்பிலான முதலீடுகளை ஊக்கப்படுத்தவும் சர்வதேச ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல்.

7.B

2030களில், நவீன, நிலைபேறான சக்திவலு சேவைகளை அனைத்து அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கும் குறிப்பாக குறைந்தளவில் அபிவிருத்தியடைந்த நாடுகள், சிறிய தீவில் அபிவிருத்தியடைந்து வரும் மாநிலங்கள் மற்றும் நிலத்தால் சூழப்பட்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் ஆகியவற்றுக்கு வழங்குவதற்காக அந்நாடுகளின் சம்பந்தப்பட்ட செயல்திட்டங்களுக்கு அமைவாக உள்கட்டமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் விரிவாக்கப்பட வேண்டும்.