Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Decent work and economic growth

கௌரவமான வேலைவாய்ப்பினையும், பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல்

கௌரவமான வேலைவாய்ப்பினையும், பொருளாதார வளர்ச்சியினையும் முன்னிறுத்தல்

உலகளாவிய வேலையின்மை விகிதங்கள் 5.7% ஆகும், உலக மக்கள் தொகையில் பாதி மக்கள் ஒரு நாளைக்கு சுமார் 2 அமெரிக்க டொலர்களுக்கு சமமாக வாழ்கின்றனர், மேலும் இது வேலை ஒன்று இருப்பது பல இடங்களில் வறுமையிலிருந்து தப்பிக்கும் திறனை உறுதிப்படுத்தாது. இவ்வகையான மெதுவான மற்றும் சீரற்ற முன்னேற்றத்திற்கு வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட நமது பொருளாதார மற்றும் சமூகக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

பண்பான வேலை வாய்ப்புகள், போதிய முதலீடுகள் மற்றும் நுகர்வுக்குறைவு ஆகியவற்றின் தொடர்ச்சியான பற்றாக்குறை ஜனநாயக சமூகங்களுக்கு அடிப்படையான அடிப்படை சமூக ஒப்பந்தத்தின் குறைவடைவதற்கு வழிவகுக்கிறது: அனைவரும் முன்னேற்றத்தில் பங்கு கொள்ள வேண்டும். உலகளவில் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்ற போதிலும், வளரும் நாடுகளில் இன்னும் பல நாடுகள் அவற்றின் வளர்ச்சி விகிதங்களில் வீழ்ச்சியடைந்து 2030 க்கு நிர்ணயிக்கப்பட்ட 7% வளர்ச்சி விகித இலக்கிலிருந்து வெகுதூரம் விலகி நகர்கின்றன. தொழிலாளர் உற்பத்தித்திறன் குறைந்து, வேலையின்மை விகிதங்கள் அதிகரிக்கும் போது, ​​குறைந்த ஊதியத்தால் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்குகிறது.

நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் பொருளாதாரத்தைத் தூண்டும் தரமான வேலைகளை மக்கள் அனுமதிக்கும் நிலைமைகளை உருவாக்க சமூகங்கள் தேவைப்படும். முழுமையான வயதுடைய அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்புகள் மற்றும் நிறைவான வேலை நிலைமைகள் தேவைப்படுகின்றன. வருமானங்களை நிர்வகிக்கவும், சொத்துக்களைக் குவிக்கவும், உற்பத்தி முதலீடுகளைச் செய்யவும் நிதிச்சேவைகளுக்கான அணுகல் அதிகரிக்கப்பட வேண்டும். வர்த்தகம், வங்கி மற்றும் விவசாய உள்கட்டமைப்பிற்கான அதிகரித்த அர்ப்பணிப்புகள் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், உலகின் மிகவும் வறிய பகுதிகளில் வேலையின்மை அளவைக் குறைக்கவும் உதவும்.

8.1

தேசிய சூழ்நிலைக்கு ஏற்ப தனிநபர் பொருளாதார நிலைமையின் வளர்ச்சி பாரமரிக்கப்பட வேண்டியதுடன் குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் மொத்த ள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வருடத்திற்கு குறைந்தது 7 விகிதமாக இருத்தல் வேண்டும்.

8.2

பன்முகத்தன்மை, தொழில்நுட்பத்தின் தரத்தை உயர்த்துதல் மற்றும் கண்டுபிடிப்புகள், உயர் மதிப்பு சேர்க்கப்பட்ட மற்றும் உழைப்பு செறிந்த துறைகளும் அடங்கலாக இவற்றிற்கு அதிகளவு கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உயர் மட்டத்திலான பொருளாதார உற்பத்தித் திறனை அடைதல் சாத்தியமாகும்.

8.3

அபிவிருத்தி சம்பந்தமான கொள்கைகள் உற்பத்தி நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்குவதுடன் அது ஒழுக்கமான தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் தொழில்முனைவோர், ஆக்கத்திறன் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பிலும் அத்துடன் ஒழுங்குபடுத்துதல் மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சியை
ஊக்குவித்தல் அடங்கலாக இவற்றின் மூலம் நிதியியல் சேவைகளுக்குள் பிரவேசிக்க முடிகிறது.

8.4

2030களில் முன்னேற்றகரமான விருத்தியை உலகளவிலான வளங்களின் செயற்திறனின் ஊடாக நுகர்விலும் மற்றும் உற்பத்தியிலும் பொருளாதார விருத்திற்கு சுற்றாடல் சீரழிவை துண்டிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதுடன் 10 வருட கட்டமைப்பின் திட்டங்களுக்கமைய நிலையான நுகர்வு மற்றும் உற்பத்தி தொடர்பில் அபிவிருத்தியடைந்த நாடுகளுடன் முன்னணியில் இருப்பதன் ஊடாக படிப்படியான விருத்தியைக் ஏற்படுத்தலாம்.

8.5

2030களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நிறைவான அடைதலும் மற்றும் உற்பத்தித் திறன்மிக்க வேலைவாய்ப்புக்கள் மற்றும் ஒழுக்கமான தொழில்களும் அமைய வேண்டியதுடன் இளைஞர் மற்றும் உடல் ஊனமுற்ற நபர்களுக்கும் சம மதிப்புடனான வேலைக்கு சமமான கொடுப்பனவும் கிடைக்கப் பெறுதல் வேண்டும்.

8.6

2020களில் இளைஞர் மத்தியில் வேலைவாய்ப்பு, கல்வி அல்லது பயிற்சி இன்மையை கணிசமானளவு விகிதாசார அடிப்படையில் குறைத்தல் வேண்டும்.

8.7

வலுக்கட்டாயமாக தொழிலில் அமர்த்தும் நிலைமையை ஒழிக்க உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்தல். நவீன அடிமை முறை, மனிதக் கடத்தல் மற்றும் சிறுவர்களை வேலைக்கமர்த்துதலை முடிவுக்கு கொண்டு வருதல். 2025களில் சிறுவர்களை தொழிலில் அமர்த்துதல் மற்றும் போர் வீரர்களாக சிறுவர்களை பயன்படுத்துதல்
ஆகியவற்றின் அனைத்து வடிவங்களையும் முடிவிற்கு கொண்டு வரவேண்டும்.

8.8

தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பான மற்றும் வேலை செய்யக்கூடிய பாதுகாப்பான சூழல் அனைத்து தொழிலாளர்களுக்கும் உருவாக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும் அதேசமயம் வெளிநாட்டில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், முக்கியமாக பெண் தொழிலாளர்கள் மற்றும் இவர்களுள் நிரந்தர தொழில் இல்லாதவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.

8.9

2030களில், திட்டமிடுவது மற்றும் கொள்கைகளை அமுல்படுத்துவதன் மூலம் நிலையான சுற்றுலாத்துறையை
ஊக்கப்படுத்தி அதன் மூலம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதுடன் நமது கலாச்சாரத்தையும்
உற்பத்திகளையும் ஊக்குவிக்க முடிகிறது.

8.10

உள்நாட்டு நிதியியல் நிறுவனங்களின் திறனை வலுப்படுத்துவதன் மூலம் வங்கியில், காப்பீடு மற்றும்
நிதியியல் சேவைகளை அனைவருக்கும் பெறக்கூடியதாக அதனை ஊக்கப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும்.

8.A

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வர்த்தக ஆதரவு, உதவி அதிகரிக்கப்பட வேண்டியதுடன், முக்கியமாக குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கட்டமைப்பான வர்த்தகம்
சம்பந்தமான தொழில்நுட்ப உதவி நடவடிக்கைகளை பெற்றுக் கொடுப்பது முக்கியமாகும்.

8.B

2020களில், அபிவிருத்தி மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பில் ஒரு உலகளவிலான மூலோபாயத்தினை
நடைமுறைப்படுத்தி அதன் மூலம் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது உலகளவில் தொழில்களுக்கான
உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.