Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Zero Hunger

பசியை ஒழித்தல்

பசியை ஒழித்தல்

நாம் எவ்வாறு வளர்கிறோம், பகிர்ந்து கொள்கிறோம், நம் உணவை உட்கொள்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது. சரியாகச் செய்தால், விவசாயம், வனவியல் மற்றும் மீன்வளம் அனைவருக்கும் சத்தான உணவை வழங்கவும், ஒழுக்கமான வருமானத்தை ஈட்டவும் முடியும், அதே நேரத்தில் மக்களை மையமாகக் கொண்ட கிராம அபிவிருத்திக்கு ஆதரவளித்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும்.

தற்போது, ​​நமது மண், நன்னீர், கடல்கள், காடுகள் மற்றும் உயிர்பல்வகைமை ஆகியவை விரைவாக சீரழிந்து வருகின்றன. காலநிலை மாற்றம் என்பது நாம் சார்ந்திருக்கும் வளங்களுக்கு இன்னும் அதிக அழுத்தத்தை அளிக்கிறது, வறட்சி மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகளுடன் தொடர்புடைய அபாயங்களை அதிகரிக்கிறது. பல கிராமப்புற பெண்கள் மற்றும் ஆண்கள் இனித் தங்கள் நிலம் சார்ந்து முடிவெடுக்க முடியாது, வாய்ப்புகளைத் தேடி நகரங்களுக்கு குடிபெயருமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். குறைவான ஊட்டச்சத்து காரணமாக மில்லியன் கணக்கான குழந்தைகள் வயதிற்கு மிகக் குறைவான வளர்ச்சி குன்றியிருக்கிறார்கள்.

இன்று பசியுடன் இருக்கும் 815 மில்லியன் மக்களையும், 2050 க்குள் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூடுதலாக எதிர்பார்க்கப்படும் 2 பில்லியன் மக்களையும் நாம் ஊட்டச்சத்தினை வழங்க வேண்டும் என்றால், உலகளாவிய உணவு மற்றும் விவசாய அமைப்பில் ஆழமான மாற்றம் தேவை. வேளாண் உற்பத்திக்கான திறனை அதிகரிப்பதற்கு விவசாயத்தில் முதலீடுகள் முக்கியம் மற்றும் பசியின் அபாயங்களைத் தணிக்க நிலையான உணவு உற்பத்தி முறைகள் அவசியம்.

2.1

2030களில், பசி, பட்டினியை முடிவிற்கு கொண்டு வருதல், ஆண்டு முழுவதும் அனைத்து மக்களுக்குமான குறிப்பாக குழந்தைகள் உள்ளடங்கலாக வறியவர்கள் மற்றும் நலிவடைந்த மக்கள் ஆகியோருக்கான பாதுகாப்பான, சத்தான மற்றும் போதியளவான உணவு கிடைப்பதை உறுதிப்படுத்துதல்.

2.2

2025களில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுவர்களில் உயரத்திற்கேற்ற எடையின்மை, வயதிற்கேற்ற உயரம் இல்லாமை ஆகியன தொடர்பில் சர்வதேச ரீதியாக ஒப்புக்கொள்ளப்பட்ட இலக்குகள், மற்றும் இளம்பெண்கள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் பெண்கள் வயது முதிர்ந்தவர்களின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்தல் ஆகியவற்றை வெற்றிகரமாக அடைவது உள்ளடங்கலாக 2030களில் ஊட்டச்சத்து குறைவின் எல்லா வடிவங்களையும் ஒழித்தல்.

2.3

2030களில், நிலம்,ஏனைய உற்பத்தித் திறன்மிக்க வளங்கள் மற்றும் உள்ளீடுகள், அறிவு, நிதியியல்
சேவைகள், சந்தைகள், பெறுமதி சேர்மானத்துக்கான வாய்ப்புக்கள்,விவசாயம் சாரா தொழில் வாய்ப்புக்கள்
என்பவற்றின் பாதுகாப்பானதும் சமமானதுமான கிடைப்பனவின் மூலமாக விவசாய உற்பத்தி மற்றும்
சிறியளவிலான உணவு உற்பத்தியாளர்களின் குறிப்பாக பெண்கள், சுதேசிகள், குடும்ப உறுப்பினர்களினை மட்டும்
பயன்படுத்தி விவசாயம் செய்யும் விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள் ஆகியோரின் வருமானத்தினை இரு
மடங்காக்குதல்.

2.4

2030களில், உற்பத்தித் திறனையும் உற்பத்தியையும் அதிகரிக்கவல்ல, சூழற்தொகுதிகளை பேணக்கூடிய,
காலநிலைமாற்றங்கள், கடுமையான காலநிலை, வரட்சி, வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் ஆகியவற்றுக்கேற்ப
மாற்றியமைத்துக்கொள்ளும் தகவை வலுப்படுத்தக்கூடிய, நிலம் மற்றும் மண்ணின் தரத்தை அதிகரிக்கக்கூடிய
நிலைபேறான உணவு உற்பத்தி முறைமைகளையும், நெகிழ்திறன்மிக்க விவசாய நடைமுறைகளையும் உறுதி
செய்தல் வேண்டும்.

2.5

2020களில், தேசிய, பிராந்திய மற்றும் சர்வதேச மட்டங்களில் வினைத்திறனாக முகாமை செய்யப்படும்
பல்வகைப்பட்ட விதை, தாவர வங்கிகள் மூலமாகவும், மரபு ரீதியான வளங்கள், பாரம்பரிய அறிவு ஆகியன
கிடைப்பதை அதிகரித்தல், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட முறையில் அவற்றின் பாவனை
மூலமான வருமானத்தின் சரியான சமத்துவமான பகிர்வு ஆகியன மூலமாக விதைகள், பயிரிடப்பட்ட தாவரங்கள்,
பண்ணை மற்றும் வீட்டு விலங்குகள், அவை சம்பந்தமான காட்டு இனங்கள் ஆகியவற்றின் மரபணுப்பல்வகைமையை
பேணுதல்.

2.A

மேம்படுத்தப்பட்ட சர்வதேச ஒத்துழைப்பின் ஊடாக, கிராமப்புற கட்டமைப்புக்கள், விவசாய ஆராய்ச்சி
மற்றும் விரிவாக்கல் சேவைகள், தொழில்நுட்ப அபிவிருத்தி மற்றும் தாவர, கால்நடை மரபணு வங்கிகள்
விவசாய உற்பத்தித்திறனை அதிகரிக்கும் பொருட்டு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குறிப்பாக
குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் முதலீடுகள் அதிகரிக்கப்படல் வேண்டும்.

2.B

உலக விவசாயச் சந்தையை சரிசெய்தலும் வர்த்தகக் கட்டுப்பாடுகளையும் ஒடுக்கங்களையும் தவிர்த்தலும்,
விவசாய ஏற்றுமதி மானியங்கள் தொடர்பில் எல்லா விதமான இணை நீக்குதல் மூலமாகவும் அனைத்து
ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கும் அதன் மூலம் டோஹா மேம்பாட்டுச் சுற்றிற்கு அமைய சமமான வினைத்திறனை
வழங்க வேண்டும்.

2.C

உணவுப் பொருட்களின் சந்தைகளில் முறையான செயற்பாட்டை உறுதிசெய்வது தொடர்பில்
நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் பங்குகள் மற்றும் சந்தை தகவல் சரியான நேரத்தில்
அணுகுவதற்கும் உணவு ஒதுக்கங்களும் அடங்கலாக தீவிர உணவு விலையின் மாற்றங்களை எல்லைப்படுத்தல்
தொடர்பில் உதவியாக இருக்க வேண்டும்.