Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Good health and well-being

நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை

நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை

அனைத்து வயதிலும் நலமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை உறுதி செய்வதன் மூலமாக வலுவாதார அபிவிருத்தியை உறுதி செய்தல்.

ஆயுட்காலத்தை அதிகரிப்பதிலும், குழந்தை மற்றும் தாய் இறப்புடன் தொடர்புடைய சில பொதுவான காரணிகளைக் குறைப்பதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன ஆனால் 2030 க்குள் 100,000 நேரடி பிறப்புகளுக்கு 70க்கும் குறைவான தாய் இறப்பு இலக்கை அடைவதற்கு திறமையான பிரசவ பராமரிப்பில் முன்னேற்றம் தேவை.

தொற்றாத நோய்களால் ஏற்படும் முன்கூட்டிய இறப்புகளைக் 2030 ஆம் ஆண்டிற்குள் 1/3 ஆல், குறைக்கும் இலக்கை அடைய, புகையிலையின் அபாயங்கள் குறித்த கல்வியறிவு, சமையல் மற்றும் சுத்தமான எரிபொருள் பயன்பாட்டிற்கு மிகவும் திறமையான தொழில்நுட்பங்கள் போன்றவை தேவைப்படும்.

பரவலான நோய்களை முற்றிலுமாக ஒழிப்பதற்கும், தொடர்ச்சியான மற்றும் அதிகரித்து வரும் பல சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இன்னும் பல முயற்சிகள் தேவை. சுகாதார அமைப்புகள், மேம்பட்ட சுகாதாரம் மற்றும் சுகாதார நிதி வசதிகள், மருத்துவர்களுக்கான அணுகல் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அதிக திறமையான நிதியை வழங்குவதில் கவனம் செலுத்துவதன் மூலமாகவும் மேலும் சுற்றுப்புற மாசுபாட்டைக் குறைப்பதற்கான வழிகளைப் பற்றிய கூடுதல் உதவிக்குறிப்புகள், மில்லியன் கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்ற உதவுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

3.1

2030களில், உலக மகப்பேற்று இறப்பு விகிதத்தை 100,000 பேரில் 70 ஆகக் குறைத்தல் வேண்டும்.

3.2

2030களில், குழந்தைகள் மற்றும் 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் தடுக்கக்கூடிய மரணங்கள் தொடர்பிலும் அனைத்து நாடுகளிலும் பிறந்த குழந்தைகளின் இறப்பை 1000 பேரில் 12 ஆகக் குறைப்பதிலும் 5 வயதிற்கு குறைந்த பிள்ளைகளின் பிறப்புகளின் இறப்பை ஆகக்குறைந்தது 1000 பேரில் 25 ஆகக் குறைப்பதன் மூலம் இப்பிரச்சினைகளை முடிவிற்கு கொண்டு வர முடிகிறது.

3.3

2030களில், தொற்று நோயான எயிட்ஸ், காசநோய், மலேரியா, புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள்
மற்றும் போர், ஈரல் அழட்சி, நீர் மூலம் பரவும் நோய்கள், ஏனைய தொற்று நோய்கள் என்பவற்றை முடிவிற்கு
கொண்டு வருவதே எமது நோக்கமாகும்.

3.4

2030களில், தொற்று அல்லாத நோய்களை கட்டுப்படுத்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மூலமாக மன ஆரோக்கியத்தையும் நல்வாழ்க்கையையும் ஊக்குவிப்பதன் மூலமாக முதிர்ச்சிக்கு முன்னரான இறப்பை மூன்றில் ஒரு பகுதியாகக் குறைக்க முடிகிறது.

3.5

போதைப் பொருள் துஷ்பிரயோகம் மற்றும் தீங்குவிளைவிக்கும் மது வகைகளும் உள்ளடங்களாக போதைப்பொருளை தவறாக பயன்படுத்தலைத் தடுத்தலும் மற்றும் சிகிச்சையளித்தலும் வலுப்படுத்தப்பட வேண்டும்.

3.6

2020களில், உலகளாவிய வீதி விபத்துக்களின் மூலமான மரணங்களையும் மற்றும் காயங்களையும் பாதியாகக்
குறைக்க வேண்டும்.

3.7

2030 களில், உலகளவிலான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரப் பராமரிப்புச் சேவைகள் மற்றும்
குடும்பக் கட்டுப்பாடு சம்பந்தமான தகவல் மற்றும் கல்வி அடங்கலாக இனப்பெருக்க சுகாதாரமானது தேசிய
உபாயங்கள் மற்றும் திட்டங்களினால் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

3.8

உலகளாவிய சுகாதார காப்பினையும் நிதியியல் அபாய பாதுகாப்பும் அடங்கலாக, இன்றியமையாத தரமான
சுகாதாரச் சேவைகள் மற்றும் பாதுகாப்பான, பயனுள்ள, தரமான மற்றும் மலிவான அனைத்து அத்தியாவசியமான
மருந்து வகைகள் மற்றும் தடுப்பூசிகள் எல்லோராலும் கிடைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

3.9

2030களில், அபாயகரமான இரசாயனப் பொருட்கள், காற்று, நீர், மணல் மாசுபடுதல் மற்றும் தூய்மைக்கேடு
ஆகியவற்றின் மூலமாக கணிசமான அளவு ஏற்படும் மரணங்களையும் மற்றும் சுகயீனங்களையும் குறைத்தல்
அவசியமாகும்.

3.A

உலக சுகாதார அமைப்பின் கட்டமைப்பு மாநாட்டின் முன்னெடுப்பினை வலுப்படுத்தி அதன் மூலம் அனைத்து
நாடுகளிலும் பொருத்தமான முறையில் புகையிலையின் பாவனையைக் கட்டுப்படுத்தல் வேண்டும்.