இலங்கையின் நிலையான அபிவிருத்திச் சட்டமானது, 2017ஆம் ஆண்டின் 19ம் இலக்க சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது, வலுவாதார அபிவிருத்தி சபையானது இலங்கையில் வலுவாதார அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவது பற்றிய ஒருங்கிணைப்பு, ஊக்குவிப்பு, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் அறிக்கையிடலுக்கான பொறுப்பான அரச நிறுவனமாகும்.
அனைவருக்குமான வலுவாதார அபிவிருத்தியடைந்ததோர் இலங்கை
சுற்றாடல், சமூக மற்றும் பொருளாதார நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதன் ஊடாக அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் முழுமையான அணுகுமுறையின் ஊடாக இலங்கையை ஒரு நிலைபேறான அபிவிருத்தியடைந்த நாடாக ஊக்குவித்தல்.
SDGஐ ஊக்கப்படுத்துவதுடனான
கொள்கை உருவாக்கமும் திட்டமிடலும்
SDG நிதியிடல் மற்றும்
பட்ஜெட் உருவாக்கம்
SDG கண்காணிப்பு,
மதிப்பீடு மற்றும் அறிக்கையிடல்
SDG தொடர்பான ஆராய்ச்சி,
வளர்ச்சி மற்றும்
கண்டுபிடிப்புகள்
SDG அடிப்படையிலான கல்வி,
விழிப்புணர்வு மற்றும்
தகவல் தொடர்பாடல்
SDG அடைவுகளுக்கான
பல பங்குதாரர்களின் கூட்டு
நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரலானது வறுமையை ஒழித்தல், உலகத்தை பாதுகாத்தல் அனைவருக்கும் அனைத்து இடங்களிலும் வாழ்தல் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புக்களை மேம்படுத்தும் உலகளாவிய ஒரு வேலைத்திட்டமாகும்.
இலங்கையின் வலுவாதார அபிவிருத்தி சபை, என்ற வகையில் நாம் நிலைபேறான வளர்ச்சியின் முப்பரிமாணங்களையும் ஒருங்கிணைத்து, சுற்றாடல் , சமூக மற்றும் பொருளாதாரத்தினை சமமாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான அணுகுமுறையை ஏற்படுத்தியுள்ளோம்.
இம் முப்பரிமாணங்களையும் ஒருங்கிணைப்பது நமது நாட்டின் பொருளாதாரம், சுற்றாடல் மற்றும் ஒவ்வொரு பிரஜையினதும் நல்வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் நம்புகிறோம்.
சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மையானது, சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதுடன் பூமியின் அனைத்து சுற்றுச்சூழல் அமைப்புகளையும் சமநிலையில் வைப்பதனை உறுதிப்படுத்துகின்றது.
இப் பரிமாணமானது எதிர்கால சந்ததியினரின் பயன்பாட்டின் பொருட்டு தங்களை மீட்டெடுக்கக்கூடிய விகிதத்தில் தற்போது இருக்கும் இயற்கை வளங்களை பொறுப்புடன் பயன்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
சமூக மற்றும் பொருளாதார நிலைபேறான தன்மையை உறுதிப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மையை நிலைநிறுத்துவது அவசியம். எனவே, நிலைபேறான வளர்ச்சிக்கு 2030 நிகழ்ச்சி நிரலானது சுற்றாடல் நிலைபேறான தன்மைக்காக பின்வரும் SDGகளை அர்ப்பணிக்கின்றது.
நிலைபேறான அபிவிருத்திக்கான சமூக பரிமாணமானது மக்கள் மீது கவனம் செலுத்துகிறது. சமூக நிலைபேறான தன்மை ஒவ்வொரு நபருக்கும் நிரந்தரமான மனித உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரத்தை காலவரையறையற்ற விதத்தில் உறுதி செய்கிறது. வலுவான சமூகங்களை வளர்ப்பது தனிநபர், தொழிலாளர் மற்றும் கலாச்சார உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யும், அதேவேளை அனைத்து மக்களும் பாகுபாடுகளிலிருந்து பாதுகாக்கப்படுவேதனை உறுதி செய்கின்றது.
ஒரு நாடு நிலைபேறான வளர்ச்சியை அடைய ஒவ்வொரு தனிநபரின் நடத்தைகளையும் நல்வாழ்வையும் மதிக்கின்ற ஒரு கூட்டு மற்றும் சமத்துவ ரீதியான சமூகமொன்றை உருவாக்குவது அத்தியாவசியமானதாகும். ஆகையினால் சமூக நிலைபேறான தன்மையை உறுதி செய்யம் பொருட்டு கீழுள்ள SDGக்கள் உறுதி பூண்டுள்ளன.
நிலைபேறான வளர்ச்சியின் பொருளாதார பரிமாணமானது ஒரு நாட்டின் சமூக மற்றும் சுற்றாடல் ரீதியான எதிர் அம்சங்களை பாதிக்காமல் நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைக்கின்ற செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்துகிறது.
பொருளாதார நிலைபேறான தன்மையினூடாக ஒவ்வொரு நாடும் தமது சுதந்திரத்தை தக்கவைத்துக் கொள்வதையும் அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய வளங்களை பெற்றுக்கொள்வதையும் அணுகுவதையும் உறுதி செய்கின்றது. நிலையான பொருளாதாரங்கள் செழித்து வளரும் பொருளாதார அமைப்புகளையும், எவ்வித பாகுபாடின்றி ஒவ்வொரு நபருக்கும் அணுகக்கூடிய பாதுகாப்பான வாழ்வாதாரங்களையும் உறுதி செய்கின்றன.
நிலைபேறான வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சி நிரலானது பொருளாதார நிலைபேறான தன்மையை அடைய பின்வரும் SDG களை அர்ப்பணிக்கின்றது.