Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Life on land

நில வளங்கள்

நில வளங்கள்

காடுகள் பூமியின் மேற்பரப்பில் 30.7 சதவிகிதத்தை உள்ளடக்கியது மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தங்குமிடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், பல்லுயிர் மற்றும் பழங்குடி மக்களின் வீடுகளைப் பாதுகாப்பதற்கும் அவை முக்கியம். காடுகளை பாதுகாப்பதன் மூலம், இயற்கை வள மேலாண்மையை வலுப்படுத்தவும், நில உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் முடியும்.

தற்போதைய நேரத்தில், பதின்மூன்று மில்லியன் ஹெக்டேர் காடுகள் ஒவ்வொரு ஆண்டும் இழக்கப்படுகின்றன, அதே நேரத்தில் வறண்ட நிலங்களின் தொடர்ச்சியான சீரழிவு 3.6 பில்லியன் ஹெக்டேர்களை பாலைவனமாக்க வழிவகுத்தது. தற்போது 15% நிலம் பாதுகாப்பில் இருந்தாலும், பல்லுயிர் இன்னும் ஆபத்தில் உள்ளது. காடழிப்பு மற்றும் பாலைவனமாக்கல் - மனித நடவடிக்கைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் - நிலையான வளர்ச்சிக்கு பெரும் சவால்களை ஏற்படுத்துகிறது மற்றும் வறுமைக்கு எதிரான போராட்டத்தில் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரங்களை பாதித்துள்ளது.

காடுகளை நிர்வகிப்பதற்கும் பாலைவனமாக்குதலை எதிர்ப்பதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமமான முறையில் வளங்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் இரண்டு சர்வதேச ஒப்பந்தங்கள் தற்போது செயல்படுத்தப்படுகின்றன. பல்லுயிர் பெருக்கத்திற்கு ஆதரவாக நிதி முதலீடுகளும் வழங்கப்படுகின்றன.

15.1

2020களில், சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு அமைவாக நிலம், உள்நாட்டு நன்னீர் சூழல் தொகுதிகளும் முக்கியமாக காடுகள், ஈர நிலங்கள், மலைகள் மற்றும் வரண்ட நிலங்கள் அவற்றின் பயன்பாடுகளினதும் பாதுகாப்பு, மறுசீரமைப்பு மற்றும் நிலைபேறான பயன்பாடு ஆகியவை உறுதிப்படுத்தப்பட வேண்டும்

15.2

2020களில், அனைத்து வகையான காடுகளினதும் நிலைபேறான முகாமைத்துவத்தை அமுல்படுத்தல். காடழிப்பை தடுத்தல், அழிக்கப்பட்ட காடுகளின் மீட்டெடுப்பு ஆகியவற்றோடு தொடர்ச்சியாக உலகளவில் காடு வளர்த்தல் மற்றும் காடுகளின் மீட்டெடுப்பு என்பனவும் உள்ளடங்கும்

15.3

2030களில், பாலைவனமயமாக்கத்துக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல், வளமிழந்த நிலம் மற்றும் மண்ணினை மீட்டெடுத்தல், வரட்சி மற்றும் வெள்ளத்துக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளடங்கலாக வளமிழப்பு அற்ற நடுநிலையான உலகத்தை உருவாக்குதல்

15.4

2030களில், மலைச்சூழற்தொகுதிகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தபட வேண்டும். இதன் மூலம் நிலைபேறான அபிவிருத்திக்கான சாதக பலன்களை அவை வழங்கும் திறன் அதிகரிக்கப்படும்

15.5

அவசரமான மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் இயற்கை வாழ்விடங்களின் தரத்தை இழக்காமல் உயிரியல் பல்வகைமையின் இழப்பைக் குறைத்து மற்றும் 2020களில் அச்சுறுத்தலான இனங்களின் அழிவைத் தடுக்க அவற்றை பாதுகாத்தல் வேண்டும்

15.6

சர்வதேச ரீதியில் ஒப்புக்கொள்ளப்பட்டபடி மரபணு வளங்களில் இருந்து கிடைக்கும் நன்மைகள் நியாயமான மற்றும் நேர்மையான முறையில் பகிரப்படுவதை ஊக்கப்படுத்த வேண்டியதுடன் அத்தகைய வளங்களின் கிடைப்பனவையும் அதிகரிக்க வேண்டும்

15.7

தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை வேட்டையாடுதல்மற்றும் கடத்தல் ஆகியவற்றை முடிவிற்கு கொண்டு வருவது சம்பந்தமாக உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இவ்வினங்கள் பாதுகாக்கப்படல் வேண்டும். அத்துடன் சட்டவிரோத வன உற்பத்திகள் தொடர்பான கேள்வி மற்றும் வழங்கலிலும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்

15.8

2020களில், நிலம் மற்றும் நீர்ச் சுற்றுச்சூழலில் பரவும் குறிப்பிடத்தக்க அன்னிய இனங்களின் அறிமுகத்தை குறைக்க நடவடிக்கை எடுத்தல். முன்னுரிமை பெறும் இனங்களை கட்டுப்படுத்தல் அல்லது ஒழித்தல் என்பன தொடர்பாகவும் கவனம் செலுத்தப்படல் வேண்டும்

15.9

2020களில், சுற்றுச்சூழல் மற்றும் உயிரியல் பல்வகைமையின் மதிப்பானது தேசிய மற்றும் உள்ளுர் திட்டமிடலில், அபிவிருத்தி செயன்முறைகளில், வறுமை ஒழிப்பு திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டும்

15.A

உயிரியல் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழலின் நிலைபேறான பாவனை மற்றும் பாதுகாப்புக்காக நிதியியல் வளங்களானது அனைத்து மூலங்களிலிருந்தும் திரட்டப்படுதலும் பயன்படுத்தப்படுதலும் வேண்டும்

15.B

கணிசமானளவு வளங்களை அனைத்து ஆதாரங்களிலிருந்தும் மற்றும் அனைத்து மட்டங்களிலிருந்தும் நிலையான வன முகாமைத்துவ நிதிக்காக அணிதிரட்ட வேண்டியதுடன் மற்றும் பாதுகாப்பு மற்றும் காடு வளர்ப்பு உட்பட மேலாண்மையை முன்னெடுத்துச் செல்வதற்காக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு போதுமானளவு சலுகைகள் வழங்கப்பட வேண்டும்

15.C

பாதுகாக்கப்பட்ட இனங்கள் தொடர்பில் வேட்டையாடுதல் மற்றும் கடத்தல் சம்பந்தமாக உலகளவிலான ஆதரவுடன் எதிர்ப்பு முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டியதுடன் உள்நாட்டு சமூகங்களின் துன்பப்படுத்தப்படும் வாழ்க்கை தொடர்பில் நிலையான வாழ்வாதார வாய்ப்புக்களும் அதிகரிக்கப்படல் வேண்டும்