Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Sustainable cities and communities

நிலைபேறான நகரங்களையும், குடியிருப்புக்களையும் அமைத்தல்

நிலைபேறான நகரங்களையும், குடியிருப்புக்களையும் அமைத்தல்

நகரங்கள்- கருத்துக்கள், வர்த்தகம், கலாச்சாரம், அறிவியல், உற்பத்தித்திறன், சமூக மேம்பாடு மற்றும் பலவற்றின் மையங்கள். சிறந்த முறையில் நகரங்கள், பொருளாதார ரீதியாக மக்கள் சமூகங்களுக்கு முன்னேற உதவியது. 2030க்குள் நகரங்களில் வாழும் மக்களின் எண்ணிக்கை 5 பில்லியனாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நகரமயமாக்கலால் ஏற்படும் சவால்களைச் சமாளிக்க திறமையான நகர்ப்புற திட்டமிடல் மற்றும் மேலாண்மை நடைமுறைகள் அவசியமாகின்றது.

நிலங்களையும் வளங்களையும் பாதிக்காமல் வேலைவாய்ப்புக்கள் மற்றும் செழிப்பான வளர்சசியை உருவாக்கும் வகையில் நகரங்களை பராமரிப்பதில் பல சவால்கள் உள்ளன. பொதுவான நகர்ப்புற சவால்களாக சனநெரிசல், அடிப்படை சேவைகளை வழங்கத் தேவையான நிதி பற்றாக்குறை, போதுமான வீட்டுவசதிவைய்புக்களின் பற்றாக்குறை, குறைவடையும் உட்கட்டமைப்பு மற்றும் நகரங்களுக்குள் அதிகரித்து வரும் வளி மாசடைதல்கள் ஆகியவை அடங்கும்.

துரித நகரமயமாக்கல் சவால்களாக, அதாவது நகரங்களுக்குள் திடக்கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுவது மற்றும் மேலாண்மை செய்வது, வளம் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல் மற்றும் மாசுபாடு மற்றும் வறுமையைக் குறைத்தல் ஆகியவற்றுடன் அவை தொடர்ந்து வளர மற்றும் வளர அனுமதிக்கும் வழிகளில் சமாளிக்க வேண்டும். அத்தகைய ஒரு உதாரணமாக மாநகர கழிவு சேகரிப்பு அதிகரிப்பினைக் குறிப்பிடலாம். நகரங்கள் அத்தியாவசிய சேவைகள், ஆற்றல், வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் அணுகலுடன் அனைவருக்கும் வாய்ப்புகளை வழங்கும் எதிர்காலமாக இருக்க வேண்டும்.

11.1

2030களில், போதுமானளவு பாதுகாப்பு மற்றும் இயலக்கூடியதான குடியிருப்பு வசதிகள் மற்றும் அடிப்படைச் சேவைகள் மேம்படுத்தப்பட்ட சேரிகள் தொடர்பில் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருப்பதை உறுதி செய்தல் வேண்டும்.

11.2

2030களில், பாதுகாப்பானதும், இயலக்கூடியதுமான நிலையான போக்குவரத்து முறைமைகள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். வீதிப் பாதுகாப்பு, பொதுவாக பொதுப் போக்குவரத்தினை விரிவாக்குவதும், பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளிலுள்ள பெண்கள், பிள்ளைகள், ஊனமுற்றவர்கள் மற்றும் வயதான நபர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியதும் அவசியம்.

11.3

2030களில், நிலைபேறானதும், அனைவரையும் உள்ளடக்குவதுமான நகரமயமாக்கலை மேம்படுத்தல்.
அனைத்து நாடுகளிலும் மனித குடியிருப்புத்திட்டங்களினதும் அவற்றின் முகாமைத்துவத்தினதும் ஒருங்கிணைந்த, நிலைபேறான திறனை அதிகரித்தல் வேண்டும்.

11.4

உலகின் கலாச்சார விடயங்கள் மற்றும் இயற்கைப் பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான முயற்சிகள்
வலுப்படுத்தப்பட வேண்டும்.

11.5

2030களில், மரணங்களின் எண்ணிக்கை மற்றும் பாதிக்கப்படும் மக்கள் எண்ணிக்கை ஆகியவற்றை
கணிசமானளவு குறைத்தல். நீரினால் ஏற்படும் அனர்த்தங்கள் அடங்கலாக அனர்த்தங்களால் ஏற்படும்
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் நேரடியான பொருளாதார இழப்புக்கள் குறைக்கப்பட வேண்டும்.
இதன்போது ஏழை மக்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளிலுள்ள மக்கள் அனைவரும்
பாதுகாக்கப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

11.6

2030களில், நகரங்களில் ஏற்படும் தனிநபருக்கான பாதகமான சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல்.
இதன்போது காற்றின் தரம் மற்றும் நகர சபை மற்றும் பிற கழிவு முகாமைத்துவம் தொடர்பிலும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.

11.7

2030களில், பசுமை மற்றும் பொது இடங்கள் ஆகியனவற்றின் பாதுகாப்பான, அனைவரையும் உள்ளடக்கிய, அனைவராலும் அடையக்கூடிய உலகளாவிய கிடைப்பனவை ஏற்படுத்துதல். இவை அனைத்தும் முக்கியமாக பெண்கள், பிள்ளைகள், வயதானவர்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.

11.A

தேசிய மற்றும் பிராந்திய ரீதியிலான அபிவிருத்தித் திட்டங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலம் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான சாதகமான பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் இணைப்புக்களுக்கு உதவுதல்.

11.B

2020களில், வளத்திறன், மட்டுப்படுத்தல் மற்றும் தழுவலானது காலநிலை மாற்றம், பேரழிவுகளைச் சமாளித்தல், அபிவிருத்தி மற்றும் முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஏற்றுக்கொண்டு அமுல்படுத்தல், நகரங்கள் மற்றும் மனித குடியிருப்புத்திட்டங்களின் எண்ணிக்கையினை அதிகரித்தல். இது சென்டாய் முன்மொழிவான அனர்த்த அபாயத்தினை குறைக்கும் 2015-2030 அனைத்து மட்டங்களிலும் முழுமையான பேரழிவு இடர் முகாமைத்துவத்திற்கு அமைய மேற்கொள்ளப்பட வேண்டும்.

11.C

ஆகக்குறைந்த அபிவிருத்தியடைந்த நாடுகளில் நிதியியல் மற்றும் தொழில்நுட்ப உதவி
ஆகியவற்றினூடாக உள்நாட்டு பொருட்களைப் பயன்படுத்தி நிலையான மற்றும் நெகிழ்திறன் மிக்க
கட்டிடங்களை கட்டியெழுப்ப உதவ வேண்டும்.