Skip to main content
switcher மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

Gender Equality

பால்நிலை சமத்துவத்தை அடைதல்

பால்நிலை சமத்துவத்தை அடைதல்

மில்லினியம் அபிவிருத்தி இலக்குகளின்  கீழ் (பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கிடையில் ஆரம்பக் கல்விக்கு சமமான அணுகல் உட்பட) பாலின சமத்துவம் மற்றும் பெண்களின் அதிகாரம் ஆகியவற்றை நோக்கி உலகம் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், பெண்கள் மற்றும் பெண்கள் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து பாகுபாடு மற்றும் வன்முறையை அனுபவித்து வருகின்றனர்.

பாலின சமத்துவம் என்பது ஒரு அடிப்படை மனித உரிமை மட்டுமல்ல, அமைதியான, வளமான மற்றும் நிலையான உலகத்திற்கு தேவையான அடித்தளமாகும். துரதிர்ஷ்டவசமாக, தற்போது, 15-49 வயதிற்குட்பட்ட 5 பெண்களில் ஒருவரும், 12 மாத காலத்திற்குள் ஒரு நெருங்கிய நபரால் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவிப்பதாக தெரிவித்துள்ளனர், 49 நாடுகளில் தற்போது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் இல்லை. குழந்தை திருமணம் மற்றும் FGM (பெண் பிறப்புறுப்பு சிதைவு) போன்ற தீங்கு விளைவிக்கும் நடைமுறைகள் குறித்து சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இது கடந்த தசாப்தத்தில் 30%மாக குறைந்துள்ளது, ஆனால் இதுபோன்ற நடைமுறைகளை அகற்ற இன்னும் நிறைய செயற்பாடுகள் தேவைப்படுகின்றன.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு கல்வி, சுகாதாரம், பண்பான வேலை மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார முடிவெடுக்கும் செயல்முறைகளில் சமமான அணுகல் வழங்குவது, வலுவாதார பொருளாதாரங்களை பாரிய அளவில் ஊக்குவிக்கும் மற்றும் சமூகங்கள் மற்றும் மனித குலத்திற்கு நன்மை பயக்கும். உலகெங்கிலும் பல நாடுகளில் நிலவும் பாலின அடிப்படையிலான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பணியிடத்தில் பெண் சமத்துவம் தொடர்பான புதிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்துவதும், பெண்களை இலக்காகக் கொண்ட தீங்கு விளைவிக்கும் நடைமுறைகளை ஒழிப்பதும் மிக முக்கியமானது.

5.1

பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான பாகுபாடுகளும் அனைத்து இடங்களிலும் நிறுத்தப்படல் வேண்டும்.

5.2

பொது மற்றும் தனியார் இடங்களில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், கடத்தல் மற்றும் ஏனைய துன்புறுத்தல்களும் அடங்கலாக பெண்கள் மற்றும் இளம் பெண்களுக்கு எதிரான அனைத்துவிதமான வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

5.3

சிறுவர் திருமணம், குறைந்த வயதுத்திருமணம், கட்டாயத் திருமணம் அத்துடன் பெண்களின் பிறப்புறுப்பு
அகற்றப்படுதல் ஆகிய தீமையை ஏற்படுத்தவல்ல அனைத்துப்பழக்கங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

5.4

சம்பளம் வழங்கப்படாத பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளை, பொதுச்சேவைகள் மற்றும் உட்கட்டுமானம் ஆகியவற்றை வழங்குதல், சமூகப் பாதுகாப்பு கொள்கைகள் மற்றும் தேசிய ரீதியில் பொருத்தமான வீட்டு உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பொறுப்புக்கள் பகிரப்படுவதை ஊக்குவித்தல் ஆகியன மூலமாக அங்கீகரித்தல் மற்றும் மதிப்பளித்தல்.

5.5

பெண்களின் முழுமையானதும் வினைத்திறனானதுமான பங்குபற்றல் மூலம் அரசியல், பொருளாதாரம்
மற்றும் பொது வாழ்க்கை சம்பந்தமாக முடிவுகளை மேற்கொள்ளும் சகல படிநிலைகளிலும் பெண்களின்
தலைமைத்துவத்துக்கு சமமான வாய்ப்பு வழங்கப்படுதல் ஆகியன உறுதி செய்யப்பட வேண்டும்

5.6

குடித்தொகையும் அபிவிருத்தியும் தொடர்பான சர்வதேச மாநாட்டின் செயற்பாட்டு வேலைத்திட்டம்,
செயற்பாட்டுக்கான பீஜிங் தளம் மற்றும் அவைகளின் போது வெளியிடப்பட்ட ஆவணங்களுக்கு அமைவாக
பாலியல் மற்றும் இனப்பெருக்கச்சுகாதாரம், இனப்பெருக்க உரிமைகள் ஆகியவற்றின் உலகளாவிய அளவில்
கிடைப்பதை உறுதி செய்தல்.

5.A

பெண்களுக்கு பொருளாதார வளங்கள்,நிலங்கள் மற்றும் வேறுவடிவ சொத்துக்கள் ஆகியவற்றின்
மீதான உரிமை, அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம், நிதியியல் சேவைகள், பரம்பரை சொத்துக்கள், இயற்கை
வளங்கள் ஆகியவற்றில் சம உரிமை வழங்குவதற்காக தேசிய சட்டங்களுக்கு அமைவாக சீர்திருத்தங்களை
மேற்கொள்ள வேண்டும்.

5.B

பெண்களை வலுப்படுத்துவதற்காக தொழினுட்ப பயன்பாட்டினை குறிப்பாக தகவல் பற்றும் தொடர்பாடல் தொழினுட்ப பயன்பாட்டினை மேம்படுத்தல்.

5.C

பாலின சமத்துவத்தை மேம்படுத்தவும் அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்கள் மற்றும் பெண்
பிள்ளைகளை வலுப்படுத்தவும் உறுதியான கொள்கைகள் மற்றும் செயலாக்கக்கூடிய சட்டங்களையும் ஏற்று
வலுப்படுத்துதல்.